ரஷ்யாவின் உக்கிர தாண்டவம்! ஒரே இரவில் தகர்க்கப்பட்ட கட்டம் - எட்டு பேர் பலி
ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள வணிக கட்டம் ஒன்று முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த தாக்குதலில் எட்டு பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் கூறியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 26வது நாளாக நீடித்துள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. தலைநகர் கீவ் மற்றும் மரியுபோல் நகரங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்துள்ள ரஷ்யா மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் கீவில் உள்ள வணிக கட்டம் ஒன்று ரஷ்ய படையின் ஷெல் தாக்குதலில் முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் கீவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் கூறியுள்ளார்.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
