இலங்கையில் விடுதி உரிமையாளரை தாக்கிய வெளிநாட்டவர் கைது
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கம, குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த எகிப்திய சுற்றுலாப் பயணி விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அறைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
33 வயதான எகிப்திய சுற்றுலாப் பயணி மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் சுமார் ஒரு மாத காலமாக விடுதிக்கு செலுத்தவேண்டிய பணத்தை அவர் செலுத்தத் தவறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுற்றுலா பயணியிடம், விடுதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ள சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப்பயணி கைது
இதன்போது கோபமடைந்த சுற்றுலா பயணி விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
பின்னர் தான் தங்கியிருந்த அறைக்குள் எரிவாயு சிலிண்டரை வீசிவிட்டு, தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் காயமடைந்த சுற்றுலா பயணியை மீட்ட பொலிஸார் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தீப் பரவல் காரணமாக விடுதியின் அறைகளுக்கும், சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாப்பயணி கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
