இந்திய முட்டைகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (05.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
முட்டைகளுக்கான அனுமதி
அதேநேரம், ஒரு மில்லியன் முட்டைகளைத் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் உள்ள முட்டைகளுக்கான அனுமதியைக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் பெற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அந்த முட்டைகளைக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் நாளைய தினம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
முட்டைகள் இறக்குமதி
இதேவேளை, கடந்த 23ஆம் திகதி இரண்டு மில்லியன் முட்டைகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரை நான்கு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
