மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் பேக்கரி தொழில்: சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
பேக்கரி தொழிலுக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தொழில் மீண்டும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதன் காரணமாகவே உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உற்பத்திக்கு உள்ளூர் முட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை தமது தொழிலுக்கு விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டை விற்பனை
உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை ஹோட்டல் மற்றும் பேக்கரிகளுக்கு விற்பனை செய்யும் திட்டம் நிறுத்தப்படும் என்று அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் பேக்கரி தொழில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam