லங்கா சதொசவில் முட்டை தட்டுப்பாடு
லங்கா சதொசவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாலே முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முட்டைகள்
இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும், கொள்வனவு செய்வதற்கு முட்டைகள் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், உள்ளூர் முட்டைகள் மற்றும் கோழி இறைச்சிகள் தற்போது சந்தையில் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
