முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது! வெளியானது அதிரடி அறிவிப்பு
நுகர்வோர் முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.எம்.சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் தற்போது முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
செயற்கையாக தட்டுப்பாடு
நாடு முழுவதிலும் குறிப்பாக மேல் மாகாணத்தில் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளால் முட்டைக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் முட்டை விலையை அதிகரிக்கும் என்று சில வியாபாரிகள் தற்போது வேண்டுமென்றே முட்டைகளை விற்பனை செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
தற்போது கோழிப்பண்ணையாளர்களால் போதுமான அளவு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் எதிர்வரும் மாதங்களில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படும்.
அதிவிசேட வர்த்தமானி
50 ரூபாவிற்கு மேல் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், நுகர்வோர் கட்டுப்பாட்டு விலையை விடக் குறைந்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும்.
இதேவேளை, சில சூப்பர் மார்க்கெட்டுகளில் முட்டை விலை 65 ரூபா எனவும், பேக்கிங் நோக்கங்களுக்காக 15 ரூபா வசூலிக்கப்படுகிறது.
எனவே பொது மக்கள் நுகர்வோர் முட்டையை 50 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்யக்கூடாது.”என கூறியுள்ளார்
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam