முட்டை விலை தொடர்பில் எட்டப்பட்டுள்ள புதிய தீர்மானம்
முட்டையின் விலை தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பண்டிகை காலத்தில் முட்டையின் விலை அதிகரிக்கப்படுமா...?
இது தொடர்பில் தெளிப்படுத்தும் போதே அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முட்டையின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,முட்டையின் விலை 80 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.இது தொடர்பில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.
வழமையாக பண்டிகை காலங்களில் முட்டைகளின் விலை அதிகரித்து காணப்படும். ஆனால் பாரியளவில் அதிகரிக்காது. நாட்டில் கேள்விகளுக்கு ஏற்ப முட்டைகள் காணப்படுகின்றன.
முட்டைகளுக்கு நிர்ணய விலை உண்டு
மேலும் முட்டைகளுக்கு நிர்ணய விலை காணப்படுகிறது. குறித்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும்.

இருப்பினும் நிர்ணய விலை காரணமாக முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளது. உற்பத்தியாளர்கள் முட்டைகளைச் சந்தைக்கு விற்பனை செய்வது குறைவடைந்துள்ளது.”என கூறியுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லை எனவும் இறக்குமதி செய்வதன் மூலம் குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam