சதொசவில் மிகக் குறைந்த விலையில் முட்டை
சாதாரண கடைகளில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
35 ரூபாவுக்கு முட்டை
குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட சதொச முட்டை விற்பனையால், சாதாரண கடைகளில் 60, 70 ரூபாவுக்கு இருந்த முட்டை விலை, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலை 35 ரூபாவரை குறைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்திலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், சாதாரண கடைகளிலும் முட்டை விலை குறைந்துள்ளதாக சதொசவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |