முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூன்று கோடி முட்டைகளின் முதல் தொகுதியை இம்மாதம் நாடு பெறும் என்று அரச வணிக இதர சட்டபூர்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் முட்டை இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
வற் உள்ளிட்ட அரசாங்க வரிகளை செலுத்தியதன் பின்னர் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு முட்டை விற்பனை
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதற்கமைய, உள்ளூர் சந்தையில் ஒரு முட்டை 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதால் மீண்டும் முட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
முட்டையின் மூலம் உள்ளூர் முட்டை வியாபாரிகள் வரம்பற்ற இலாபம் ஈட்டுவதாகவும், இதனால் நுகர்வோருக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதாகவும் தலைவர் ஆசிறி வலிசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
