கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்க தீவிர முயற்சி
கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.
கடும் மழை
அதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அண்மையில் கூடிய நாடாளுமன்றத்தின் முறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான செயற்குழு கொழும்பு நகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், இதன் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
அதற்கமைய, கொழும்பு நகருக்கு நாளாந்தம் வரும் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் நகரவாசிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான செயற் குழுவின் அண்மைய அவதானத்திற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 16 மணி நேரம் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
