பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களால் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.
எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்(United Kingdom ) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் இன்று (24.11.2024) போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமிழீழ தேசிய கொடிநாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
கார்த்திகை 21
1990 ஆம் ஆண்டு கார்த்திகை 21 ஆம் நாள் எமது தேசிய கொடியை தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தி முதன்முதலாக ஏற்றி வைத்தார்.

எமது தேசியக்கொடி எமது இனத்தின் தனித்துவத்தின் ஒரு அடையாளமாக விளங்குகின்றது. இதன் தனித்துவத்தையும் புனிதத்துவத்தையும் நிலைநிறுத்தி அடுத்த சந்ததியிடம் கையளிப்பது எமது கடமையென இதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வானது லண்டனில் இன்று பிற்பகல் 12 மணி தொடக்கம் 03 மணிவரை நடைபெற்றது. இதில் பெருமளவான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri