சுவிட்சர்லாந்தில் தேசிய ரீதியில் இறுதிப்போட்டிக்குத் தெரிவான ஈழத்தமிழரின் நடன நிகழ்ச்சி
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய தொலைக்காட்சியான SRF 1 இல் நேற்று இரவு இடம்பெற்ற நகரமும் கிராமமும் என்னும் பல் திறன் போட்டி நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட இளம் கலைஞர்களைக் கொண்ட Creation Dance Crew நடனக்குழுவின் நடனம் இடம்பெற்றது.
இந்த இளம் கலைஞர்கள் நடுவர்களினதும் பார்வையாளர்களினதும் அமோக வரவேற்பைப் பெற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இந்தப் போட்டி நடைபெறும் வேளையில் மக்களின் வாக்குகளின் மூலமே வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.
எனவே இந்த இளம் தமிழ் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் (ஏனைய நாட்டு மக்களும் உட்பட) அவர்களுக்கு வாக்களித்து அவர்களின் வெற்றிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இளம் கலைஞர்கள் இப்போட்டியில் வெற்றி பெறுவது தமிழ் மக்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் கிடைக்கும் ஓர் வரலாற்று வெற்றியாகும்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam