ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் தொடர்பில் ரணிலுக்கு கிடைத்துள்ள சர்ச்சைக்குரிய தகவல்
ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவரது கல்வித் தகைமைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) சர்ச்சைக்குரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியினை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ரணிலுக்கு கிடைத்த தகவல்கள்
சபாநாயகர் அசோக ரன்வல்லவின் கல்வித் தகைமைகள் தொடர்பில் தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, ஆளும் கட்சியின் மேலும் இரு உறுப்பினர்களின் கல்வித் தகைமை தொடர்பான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை ஆராய குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் இன்று குறித்த குழு தொடர்பான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.