திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் நிதி உதவி
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த மாணவருக்கும் படிப்பைத் தொடரப் பணவசதி அற்ற மாணவருக்குமாக மொத்தம் 64 மாணவருக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் மூன்று மாதத்துக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று(21.06.2024) இடம்பெற்றுள்ளது.
நிதி உதவி
திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர் இதற்கான காசோலைகளை வழங்கி வைத்துள்ளனர்.
இதேவேளை, திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், கல்வியின் முதன்மை பற்றியும் எதிர்காலத்தில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய சமூகப் பணிகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |