கல்வி மறுசீரமைப்பில் ஹரினியால் கோடிக் கணக்கில் பண மோசடி: தேரரின் அதிர்ச்சித் தகவல்
ஆங்கில புத்தகங்களை மனப்பாடம் செய்து கொண்ட மோசடிக்காரர்களே புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி கோடி கணக்கில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல தேரர் தெரிவித்துள்ளார்.
இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் பிரதமர் ஹரினியின் தலைமையில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆசிரியர் சங்கங்களுக்கு தெளிவுபடுத்தும் மாநாட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் வெளிநடப்பு செய்த பின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அறியாத ஒரு அறிக்கையை
தொடர்ந்து கருத்து தெரிவித்த தேரர், குறித்த கூட்டங்களுக்கு கலந்து கொண்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு அவற்றுக்கான வவுச்சர்களும் போட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தெரிந்து கொள்வதற்கான எவ்விதப் பத்திரங்களும் அவர்களிடம் இருக்கவில்லை. சீரமைப்பு குழுவின் தலைவர் யாரென்று கூட அறிவிக்கவில்லை.
ஆனால் மக்கள் அறியாத ஒரு அறிக்கையை கொடுத்துள்ளனர்.
தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்களை ஏன் சொல்ல முடியாது?
மேலும் மக்கள் விரும்பாத கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த நாங்கள் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




