மற்றுமொரு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
புதிய இணைப்பு
வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (20.01.2025) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறை
இதற்கிடையில், இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் முன்னெடுக்கப்படுவதால், இன்று (20) நடைபெறவிருந்த தேர்வு பாடங்கள் எதிர்வரும் சனிக்கிழமை (25) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |