கனடாவில் முட்டை கொள்வனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
கனடாவில் (Canada) பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் முட்டைகள் குறித்து அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் ஒருசில வகை முட்டைகளில் சல்மொனெல்லா பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கனேடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பக்றீரியா தாக்கம்
சில வகை பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இந்த பக்றீரியா தாக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொம்பிலிமன்ட்ஸ், போர்மோஸ்ட், கோல்டன் வெலி, ஐ.ஜீ.ஏ மற்றும் வெஸ்டர் பெமிலி போன்ற பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இவ்வாறு பக்றீரியா தொற்று ஆபத்து காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரிட்டிஸ் கொலம்பியா, மானிடோபா மற்றும் ஒன்றாரியோ போன்ற மாகாணங்களில் இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான முட்டை வகைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட வகை முட்டைகளை சந்தைகளிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முட்டை கொள்வனவு செய்தவர்கள் மற்றும் அதனை நுகர்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam