சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சீருடை விநியோகம்
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்,
பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் செய்யும் பணி என்பன எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் நாளையதினம்(19) ஆரம்பிக்கப்படவுள்ளன.
2023ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன்(16) நிறைவடைந்த நிலையில், நாளை முதல் புதிய கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri