பாடசாலை கற்றல் நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் அனைத்து தரங்களில் கல்வி கற்றும் மாணவ மாணவியர் முழுமையாக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக மாணவர்கள் குழுக்களாக அழைக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மாணவ மாணவியருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri