கல்வி அமைச்சின் செயலாளரை தூக்குவேன்! மிரட்டும் அமைச்சர் நசீர் அஹமட்(Video)
சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தொடர் அழுத்தம் காரணமாகவே கிழக்கு மாகாண ஆளுநரை நாடினேன் என கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
"நசீர் அஹமட், தான் வைப்பது தான் சட்டம் எனவும், கல்விச் செயலாளர் திஸாநாயக்கவை இரவோடு இரவாக தூக்குவதாகவும், வீதிக்கு இறங்க விடாமல் பண்ணுவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்."
காத்தான்குடியில் கடந்த ஜூன் மாதம்11ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நசீர் அஹமட் வெளியிட்ட இவ்வாறான கருத்துக்கள் சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகவும், அவர் தனது அரசியலை தக்கவைத்துக் கொள்ள இவ்வாறு செயற்பட்டமைக்கு எதிராக அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளதுடன், தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
