யுனெஸ்கோ பணிப்பாளர் சபைக்கு அமைச்சர் சுசில் தெரிவு
யுனெஸ்கோ பணிப்பாளர் சபைக்கு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற பணிப்பாளர் சபைக்கான வாக்கெடுப்பில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இருந்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் சபைக்கான இலங்கையின் வேட்பாளராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தகுதி பெற்ற 188 நாடுகளில் 144 நாடுகளின் வாக்குகளைப் பெற்று இதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யுனெஸ்கோ பணிப்பாளர் சபை
இதன்படி 2024 முதல் 2027 வரை யுனெஸ்கோ பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது.
இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு கல்வி அமைச்சர் முன்வந்தார், இம்முறை யுனெஸ்கோ நிர்வாக சபைக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |