நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு! முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.
பாதாள உலகக்கும்பல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு துணிச்சல் பெற்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு என்ற பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை பொலிஸ் மாஅதிபர் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam