கோழி முட்டை பயன்பாடு 80 வீதமாக குறைந்துள்ளது:கிராமங்களில் இயங்கி வந்த கோழிப் பண்ணைகள் மூடல்
நாட்டில் மக்கள் கோழி முட்டைகளை பயன்படுத்துவது 80 வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சந்தையில் தற்போது ஒரு கோழி முட்டை 30 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.
முற்றாக மூடப்பட்ட கோழிப் பண்ணைகள்
அத்துடன் கிராம மட்டத்தில் இயங்கி வந்த கோழிப் பண்ணைகளில் 80 வீதமான பண்ணைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.
மிகப் பெரிய கோழிப் பண்ணைகளில் 50 வீதமானவை மாத்திரம் தற்போது இயங்கி வருகின்றன. அதேவேளை முட்டை உற்பத்திக்கான செலவு 35 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

கோழிப் பண்ணை தொழிலுக்கு தேவையான பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால், கிராமங்களில் கிராமிய கைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த கோழிப் பண்ணை தொழிலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பாரம்பரியமாக கோழிப் பண்ணைகளை நடத்தி வந்த பலர், அதனை கைவிட்டு, கயிறு தயாரிப்பு போன்ற வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வரை கோழி முட்டைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் சரத் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam