பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பலாம்! உயிர்களை மீண்டும் பெற முடியாது - ரணில்
அடுத்த சில வாரங்களுக்குள் இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று நிலைமை மிக வேகமாக அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான அலுவலகம் எச்சரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இப்படியான துரதிஷ்டவசமான நிலைமை ஏற்படுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எண்ணாது, முழு நாட்டையும் முடக்கித் தொற்று நோய் நிலைமையை எதிர்கொள்வதைத் தவிர மாற்று வழி கிடையாது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பச் சந்தர்ப்பம் இருக்கின்றது.
ஆனால், இழக்கப்படும் உயிர்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.
பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக நாட்டு மக்களின் உயிர்களை பலிகொடுக்கக் கூடாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri