அடுத்த ஐந்து வருட பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்
இலங்கையின் எதிர்காலத்தை அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) நேற்று (16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பு
கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 4 வருடங்களாக தொழில்களை வழங்க முடியாமற்போனதோடு, தொழில் கிடைத்த பலரும் அவற்றை இழந்து நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது.
இதனால் புதிய பாதையில் சென்று தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமா, இல்லாவிட்டால் பழைய முறையில் சென்று வீழ்ச்சியடைவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
காலத்துக்குக் காலம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், சரியான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் நாடு முன்னேற்றமடையும் இதற்காகவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அரசியல் ரீதியான தீர்வைத் தேடும் இந்நாட்டு மக்கள், ஒருபோதும் பொருளாதாரத்தின் பக்கமாக தீர்வைத் தேடவில்லை என்றும், சரியான பொருளாதாரக் கொள்கையின் ஊடாக மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பரந்தளவான அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |