கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை (Photos)
இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும்,
எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வரிசைகளில் மக்கள் நிற்பதுடன், இதன்போது மோதல்களும் பதிவாகியிருந்தன.
சில போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன, இதற்கு பதிலடியாக போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
அத்துடன் ஊரடங்கு உத்தரவையும் விதித்தனர். தீவு முழுவதும் தினசரி திட்டமிடப்பட்ட மின் தடைகள் உள்ளதுடன் சில திட்டமிடப்படாத மின் தடைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளுக்கும் பற்றாக்குறை காணப்படுகிறது. பொதுப் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து பயணிகள் நாட்டின் உள்ளூர் ஊடகங்களை தொடர்ந்து அவதானித்து வர வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகளுக்கு இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
