ஆளுமை இல்லாத சஜித் - ரணில் வசமானது பிரதமர் பதவி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தலுக்குச் செல்வதற்கான சூழல் அமையும் வரை, குறுகிய காலத்துக்குப் பிரதமர் பதவியை ஏற்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், ஆளுமை இல்லாததால், அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை.
ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால் பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு தமக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டும் அவர் அதில் எந்த கவனமும் அக்கறையும் செலுத்தவில்லை எனவும் அதற்கான பலம் தமக்கு இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றார்.
முன்னதாக பிரதமராக பதவியேற்றுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவர் சில நிபந்தனைகளை விதித்து பதவியேற்பதை தவிர்த்திருந்தார்.
இதனையடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
