வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி - அரசாங்கம் முன்வைத்துள்ள நிபந்தனை
வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"இன்று நாங்கள் எரிவாயு வரிசைகள், எண்ணெய் வரிசைகள், மின்வெட்டு, பால்மா தட்டுப்பாடு மற்றும் மருந்து பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒன்றாக வேலை செய்கிறோம். இது தொடர்பாக மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளோம்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றால், வரிசைகளை அகற்றவும், மக்களுக்கு மருந்துகளை வழங்கவும், மின்வெட்டை நிறுத்தவும் முடியும் என்று அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சில வரிச் சலுகைகளை வழங்கவும் நான் முன்மொழிகிறேன்.

இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடனை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சலுகை வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம்.
மேலும், குறைந்தபட்சம் 50,000 டொலர்கள் அனுப்பப்பட்டிருந்தால், பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான மதிப்பெண் முறையை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan