ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் வழங்கப்படவுள்ள உதவி திட்டம்
கடந்த சில மாதங்களாக நாட்டில் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன.
பொருளாதார நெருக்கடி
உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு,எரிவாயு,எரிபொருள் தட்டுபாடு என மக்களின் அன்றாட தேவைகளுக்காக வரிசைகள் பல உருவாகின.
இந்நிலையில் அரசாங்கத்தின் மீது கோவம் கொண்ட மக்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டங்களின் விளைவாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து முற்றுமுழுதாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றாலும் ஓரளவு சாதாரணமான நிலை உருவாகியது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பல துறைகள் முயற்சிக்கின்றன. இதற்கு அரசாங்கமும் பல உதவிகளை செய்து வருகின்றது.
உதவி திட்டம்
அந்தவகையில்,எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையின் போது விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள உதவி திட்டம் தொடர்பில் விவசாய அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, ஒவ்வொரு விவசாயிக்கும் 50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபெலஸவில், நேற்று (17.09.2022) இடம்பெற்ற சிறிய அளவிலான விவசாய வியாபார வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உர மூட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.