அலரி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் - முக்கிய உறுப்பினர்கள் மறைந்திருப்பதாக தகவல் (Video)
கொழும்பில் வன்முறை வெடித்துள்ள நிலையில், மக்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், அலரி மாளிகைக்குள் மக்கள் நுழைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகின.
முன்னதாக அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை கலைக்கும் நோக்கில் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், தடியடி மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே, அலரி மாளிகைக்குள் மக்கள் நுழைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகின. அரசாங்கத்தின் மிக முக்கியமான உறுப்பினர்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது குறித்து அலரி மாளிகை தரப்பை தொடர்புகொள்ள முயற்சித்த போது தொடர்புகொள்ள முடியவில்லை. அலரி மாளிகை தரப்பிலிருந்து இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், போராட்டகார்கள் தரப்பிலிருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.