பிரதமராகின்றார் ரணில் - பல தரப்பினர்களிடம் ஆதரவு கோரி அழைப்பு
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் 25 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அத்துடன், அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
தற்போது முழு அதிகாரமும் ஜனாதிபதியிடம் சென்றுள்ள நிலையில், விரையில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு பல்வேறு தரப்பினர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்த போதிலும் யாரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் 25 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல தரப்பினரிடம் தாம் பிரதமராக நியமிக்கப்பட்டார ஆதரவளிப்பீர்களா எனத் தொலைபேசி ஊடாக விக்கிரமசிங்க கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
