மகிந்த ராஜபக்சவை உடன் கைது செய்யுங்கள் - தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களில் சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சிறைச்சாலைகள் ஆணையாளரை உடனடியாக கைது செய்யுமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC) கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
மைனகோகம மற்றும் கோட்டகோகம மீது தாக்குதல் நடத்துவதற்காக வத்தரேகா சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் களமிறக்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் ஆணையாளரை உடனடியாகக் கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஒன்றிணைந்த அடையாளப் போராட்டத்தை நடத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அவர்கள் கோட்டகோகமவிற்கு ஆதரவாக காலி முகத்திடலுக்கு பேரணியாகச் சென்றனர்.
நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டியதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“அரசால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் உள்ளூர் அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பொது நிதியில் பராமரிக்கப்படும் செயலிழந்த உள்ளூராட்சி மன்றங்கள், அந்த மக்களுக்கு அடியை மட்டுமே கொடுக்கும் வகையில் செயல்படாமல் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்," என்று அவர் வலியுறுத்தினார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam