இலங்கைக்கு உதவிய இந்தியா - சீனா பாராட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. எனினும், பொருளாதார பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதைத்தவிர 2000 கோடி ரூபாய் அளவிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கி இருக்கிறது.

சீனா பாராட்டு
இந்தியா இலங்கைக்கு செய்து வரும் உதவிகள் குறித்து சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவு அமைச்சர் ஜாவோ லிஜியன் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை நாங்கள் அறிவோம்.
அதை சரி செய்வதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகளையும் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். அவற்றை பாராட்டவும் செய்கிறோம். சீனா இந்தியா மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை மற்றும் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ தயாராக இருக்கிறது.
சீனாவும் இலங்கைக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
எங்களால் முடிந்த அளவிற்கு சீனாவின் சமூக - பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவை வழங்கி வருகிறோம். 500 கோடி அளவிலான மனிதாபிமான உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri