கொழும்பில் தொடரும் அவலம் - மண்ணெண்ணெய்க்காக வீதியில் உறங்கும் மக்கள் (Photo)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருட்களுக்கான விலையும் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
தற்போதைய நெருக்கடி காரணமாக அரசியல் ஸ்தீரதன்மையும் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை உடன் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது எரிபொருள் வாங்குவதற்காக குறிப்பாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிலும் சிலர் வீதிகளில் உறங்குவதையும் காணக்கூடியதாக உள்ளது.




Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
