டொலரின் மதிப்பு 500 ரூபா வரை அதிகரிக்கும் - முன்னாள் கணக்காய்வாளர் எச்சரிக்கை
இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க டொலரின் மதிப்பு 500 ரூபா வரை அதிகரிக்கலாம் என முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க எச்சரித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது குறித்து கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு புதிய வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது என காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri