உயர்நீதிமன்ற உத்தரவின் எதிரொலி : மூடப்பட்ட விசா விண்ணப்பதளம்
உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, இலங்கையில் போட்டியின்றி வழங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த, VFS Global, IVS மற்றும் GBS எனப்படும் நிறுவனங்களின் இலத்திரனியல் விசா விண்ணப்பத்தளம் மூடப்பட்டுள்ளது.
இந்த தளம் செயல்படுத்தப்படும் ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட சில இடைக்கால உத்தரவுகள் குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தின் முதல் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இணையச்சேவை
இதன்படி உயர்நீதிமன்ற உத்தரவுகளை கருத்தில் கொண்டு, இலங்கை நேரப்படி ஆகஸ்ட் 2 ஆம் திகதி காலையில் இணையதளம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குடிவரவுத் திணைக்களம் தகுதியான நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நேரடியாக, வருகைக்கான விசாக்களை தொடர்ந்து வழங்கி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இதற்கான இணையச்சேவையில் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி வரை ஈடுபட்டுக்கொண்டிருந்த உள்நாட்டு நிறுவனமான மொபிடெல்லின் தளம் எப்போது மீள இயங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை
முன்னதாக மொபிடெல் தமது இணையச் சேவைக்காக ஒரு டொலரை வசூலித்துக் கொண்டிருந்தது,
அதே நேரத்தில் VFS குளோபல் 10 டொலர்கள் முதல் 18.5 டொலர்கள் வரை வசூலித்தது. இதுவே அந்த நிறுவனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு காரணமாக அமைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |