தேர்தல் செயன்முறை தொடர்பில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து அரசாங்கம் விளக்கமளிப்பு
நடக்கவிருக்கும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் பொறுப்பற்ற மற்றும் பொய்யான செய்திகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழு நேற்றைய தினம் (16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ”நாடாளுமன்றத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நம்பகத்தன்மையுடனும் நடாத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணைக்குழுவினால் தற்போது செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஏற்பாடுகள்
ஆயினும், பல்வேறுபட்ட ஆட்களினாலும் அமைப்புக்களினாலும் தேர்தல் சட்டங்களை நடைமுறைபடுத்தல், பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஏனைய நிர்வாக விடயங்கள் தொடர்பில் வெளியிடும் கூற்றுக்கள் மற்றும் அபிப்பிராயங்கள் ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஆட்கள் மற்றும் அமைப்புக்களினால் வெளியிடப்படும் கூற்றுக்கள், அபிப்பிராயங்கள் மற்றும் அறிவூட்டல்கள் பொய்யான மற்றும் அடிப்படையற்ற செய்திகள் என்பதனால் அவற்றை பொருட்படுத்த வேண்டாமென மேலும் அறிவித்தல் வழங்கப்படுகின்றது” என அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை, தேர்தல் தொடர்பான பிணக்குகளை தீர்க்கும் நிலையங்களின் ஒருங்கிணைப்பு தகவல்களுக்கான தொடர்பாடல் இலக்கங்கள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், தேசிய தேர்தல் பிணக்குகளை தீர்க்கும் நிலையத்தினையும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நிலையங்களையும் அனுகவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
