கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் பாதிப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, உலக வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலை என தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் மீறி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது வரை கொங்கோவில் எபோலா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,532 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 4 மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

போதுமான நிதி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாமை, வாகனப் பற்றாக்குறை மற்றும் உள்நாட்டு ஆயுதக் குழுக்களின் மோதல்கள் காரணமாக சில பகுதிகளை அணுக முடியாமை ஆகியவை நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri