எபோலா வைரஸால் 131 பேர் பலி: அவசரமாக கூடுகிறது உலக சுகாதார அமைப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் காம்பா தெரிவித்துள்ளார்.
இதுவரை 513 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், முந்தைய கணக்கெடுப்பில் 91 ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளமை உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எபோலா பரவலை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
புதிய தொற்றுநோய்
தற்போதைய சூழலில் இந்த வைரஸ் அண்டை நாடான உகாண்டாவிற்கும் பரவத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், "இந்த நோய்த்தொற்றின் பரவல் வேகம் மற்றும் அதன் வீரியம் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது" என்று ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், புதிய தொற்றுநோய்க்கான தடுப்பூசி வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு நிபுணர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.
எச்சரிக்கை
தற்போது கொங்கோவில் பரவி வரும் எபோலாவின் 'புண்டிபுகியோ' வகை என்பதுடன் பிரத்தியேகமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த வகை எபோலா வைரஸ் தாக்கும் நபர்களில் 50 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், விலங்கின சோதனைகளில் மற்றொரு வகை எபோலா தடுப்பூசி இதற்கு ஓரளவு பலனளிப்பது தெரியவந்துள்ளதால், அதுகுறித்து இந்த அவசரக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam