கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மீண்டும் தீவிரமடைந்துள்ள எபோலா வைரஸ் பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை 930 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நோய் பரவும் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உறுதிசெய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,344 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்புகள்
குறிப்பாக, ஒரே நாளில் 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மே 15 அன்று எபோலா பரவல் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, தற்போது பதிவாகி வரும் நாளாந்தப் பாதிப்புகள் மிக அதிகபட்சமாக உள்ளன.

நோயாளிகளின் உமிழ்நீர் மற்றும் உடல் திரவங்கள் மூலம் பரவக்கூடிய இந்த எபோலா வைரஸ், கொங்கோவின் 5 மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது 724 நோயாளிகள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 460-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.