சுவிஸின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்தின், ஜெனீவாவில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள சில செம்மஞ்சள் நிற பெட்டிகள் தொடர்பில் மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பெட்டிகள் புவியின் வெப்ப ஆற்றலை கண்டறியும் நோக்கிலும், நிலத்தில் காணப்படும் அதிர்வுகளை அளவிடும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மாகாணம் முழுவதும், இது போன்ற சுமார் 20,000 பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெட்டிகளை பார்க்கும் மக்கள் அவற்றை எடுத்துப் பார்த்துவிட்டு வேறு இடங்களில் நகர்த்தி வைத்து விட்டுச் செல்வதால், அவை சேகரிக்கும் தரவுகளில் பிரச்சினை ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள், தற்போது அவற்றை மக்கள் அணுகாத வகையில் நகரின் மையப்பகுதிக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், குறித்த பெட்டிகளை கண்காணிக்க ரோந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை அவற்றில் GPS கருவியும் பொருத்தப்பட்டுள்ளதால் அவை எங்கிருக்கின்றன என்பதை இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் மக்கள் அவற்றை வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.