போராட்டத்திற்கு தயாராகும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்!
கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து குரல் எழுப்பிய மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதி குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியளாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் நேற்று (03.03.2025) திருகோணமலை ஊடக இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தடை
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீட மாணவர்கள் ஒன்றியத்தினரால் குறித்த ஊடக சந்திப்பானது முன்னெடுக்கப்பட்டது.
இந்த வளாகத்தில் காணப்படும் விடுதி தொடர்பான குறைபாடுகள், உணவருந்துவதற்கன தொகுதி, மலசலகூடம் தொடர்பான குறைபாடுகள் தொடர்ச்சியாக காணப்பட்டு வந்ததாகவும், இவ்விடயம் தொடர்பில் நிர்வாகத்திற்கு எதிராக குரல்கொடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு இரு வாரங்களுக்கான கல்வித் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் பாராமுகமாக இருப்பதன் காரணமாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தாம் தயாராக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam
