கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண கூட்டம்
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் அங்குரார்ப்பண கூட்டம் கொரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு இணைய வழி ஊடாக இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் புதிய நிர்வாக சபை உருவாக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடகவியலாளர்களின் நலன்புரி நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக,
1) தலைவர் - வாலசிங்கம் கிருஷ்ணகுமார்
2) செயலாளர் - செல்வக்குமார் நிலாந்தன்
3) பொருளாலர் - புண்ணியமூர்த்தி சசிகரன்
4) உப செயலாளர் - லோகநாதன் கஜரூபன்
5) உப தலைவர் - அரசரெத்தினம் அச்சுதன்
6) இணைப்பாளர் - மட்டக்களப்பு - சுப்பிரமணியம் குணலிங்கம்
7) இணைப்பாளர் - திருகோணமலை - பொன்னுத்துரை சற்சிவானந்தம்
8) இணைப்பாளர் - அம்பாறை - கார்த்திகேசு
9) பெண்கள் ஊடக இணைப்பாளர் - கணபதிப்பிள்ளை சூரியகுமாரி
10) உறுப்பினர்கள் மட்டக்களப்பு - நல்லதம்பி நித்தியானந்தன், குகராசு சுபோஜன், எஸ்.கங்காதரன்
11) உறுப்பினர்கள் - திருகோணமலை - சிவகுமாரன் ஹயக்கிரிவன், பாலேந்திரலிங்கம் விபூஷிதன், வடமலை ராஜ்குமார்
12) உறுப்பினர்கள் - அம்பாறை - சுகிர்தகுமார், கே.குமணன், லோ. கஜரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி ஊடகவியலாளர் ஒன்றியம் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, மற்றும் உரிமைகள் சார்ந்து ஏனை ஊடக அமைப்புக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற உள்ளதுடன், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை வளப்படுத்தி அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.







அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam