கிழக்கு மாகாண ஆளுநர் - நோர்வே மற்றும் நெதர்லாந்து உயரஸ்தானிகர் இடையில் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், நோர்வே மற்றும் நெதர்லாந்து உயரஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப் பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து நாடுகளும் கிழக்கு மாகாணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கிழக்கின் விவசாயத்தை ஊக்குவிக்கும் விடயத்தில் மிகவும் கரிசனையாக இருப்பதாகவும் நெதர்லாந்து உயரிஸ்தானிகர் குறிப்பிட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் சேதனை பசளை தயாரிக்கும் விடயத்தில் சர்வதேச மட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதன்போது தெரிவித்துள்ளார்.




புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri