வரலாற்றில் பதிவாகிய கிழக்கு மாகாணம்
மாகாண வரலாற்றில் ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான விபரங்களடங்கிய தரவுத்தள கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட முதலாவது மாகாணமாக கிழக்கு மாகாணம், வரலாற்றில் பதிவாகியதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சு ஏற்பாடு செய்த ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான
தரவுக்கட்டமைப்பை இன்று(10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில்
பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வானது திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சில் நடைபெற்றது.
இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களின் விபரங்கள், கடமையாற்றும் பாடசாலை, ஆசிரியர் வெற்றிடங்கள், மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் உட்பட பல விடயங்களை உடன் அறியக்கூடியதாக அமையும்.
அத்துடன் உரிய விபரங்களை மையமாக வைத்து ஆக்கபூர்வமான தீர்மானங்களை கல்விசார் விடயங்களில் எட்டுவதற்கு இத்தரவுத்தளம் ஏதுவாக அமையும்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி.வணிகசிங்க, ஆளுநரின்
செயலாளர் எல். பி. மதநாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். ஈ.
எம்.டபிள்யு. ஜி. திஸாநாயக்க, மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
