கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2021ஆம் ஆண்டில் வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் கிழக்கு மாகாண இணையத்தளமான EP.gov.lk எனும் மாகாண சுகாதார சேவைகள் வலைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மேன்முறையீட்டிற்கான விண்ணப்ப படிவமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவிட் - 19 சூழ்நிலை காரணமாக 2020 எட்டாம் மாதம் 29ஆம் திகதி வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயிருந்தது.
இந்நிலையில் இம்முறை
2021ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த
போதிலும் தற்காலிகமாக இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam