கிழக்கு இரவு அஞ்சல் தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்திருந்த தொடருந்து தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு தொடருந்து இரவு அஞ்சல் தொடருந்து சேவை நேற்று(20) இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சல் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் இரவு அஞ்சல்தொடருந்து இரவு 7.30 மணிக்கு திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது.
மீண்டும் ஆரம்பம்
அதே நேரத்தில், கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் இரவு அஞ்சல் தொடருந்து இரவு 9.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது.

கடந்த நவம்பர் 28ஆம் திகதி டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கிழக்கு தொடருந்து பாதையில் தொடருந்து தண்டவாளங்கள் சேதமடைந்ததால் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
பின்னர் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை அடுத்து, இதுவரை பகல் நேரங்களில் மட்டுமே தொடருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரவு தொடருந்து சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan