கிழக்கு வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்பு ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உதவி ஊழியர்களின் அடிப்படை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த சுகாதார வேவைகள் சங்க மத்திய குழு உறுப்பினர் மாணிக்கராசா லோகராஜ் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் - புன்னக்குடா வீதியிலுள்ள ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்க காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளார் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முறையான ஆட்சேர்ப்பு செயல்முறை
கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உதவி ஊழியர்களுக்கு பணிபுரியும் அனைத்து அரச சிறப்பு விடுமுறை வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு, நோயாளர்களுக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இல்லாமல் ஆக்கப்பட்ட உணவு வழங்குக, அட்டெண்டர் நியமனத்தை குறித்த தினத்திலே வழங்குக, நோயாளர்களை கொல்லாமல் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை உடனடியாக தீர்க்க வேண்டும்.
முறையான ஆட்சேர்ப்பு செயல்முறையை அமைத்திடு, மேலதிக நேரத்தை 150 மணித்தியாலங்களுக்கு, மேலதிக நேரக் கொடுப்பனவை ரேட் முறையில் வழங்கு, மேற்பார்வையாளர்கள் உணவு மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பதவி உயர்வுகளை விரைவுபடுத்து, சம்பள உயர்வு உடனடியாக வழங்கு வரிச்சுமையுடன் கூடிய பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் கொடு போன்ற 9 கோரிக்கைகளை முன்வைத்து சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.
இருந்தபோதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த 9 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 11 ம் திகதி பகல் 12 மணியளவில் வைத்தியசாலைகளுக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.
எதிர்வரும் 22 சுகயீன விடுமுறை தெரிவித்து திருகோணமலையில் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் காரியாலயத்துக்கு முன்னால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றிவரும் உதவி ஊழியர்கள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |