கிழக்கு மாகாண திணைக்களத்தின் வளங்கள் தொடர்பில் ஆளுநரின் கோரிக்கை
கிழக்கு மாகாண திணைக்களத்தின் வளங்களை சரியாக பயன்படுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண கணக்காய்வுத் துறை அதிகாரிகளை நேற்றையதினம்(31.01.2025) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கணக்காய்வு அதிகாரிகள் தூய்மையான இலங்கைத் திட்டத்தில் முக்கிய பங்குதாரர்கள் ஆவர். அவர்களின் சேவையை நான் உண்மையாக எதிர்ப்பார்க்கின்றேன்.
முக்கியப் பணிகள்
அரச சேவையில் திருத்தப்பட வேண்டிய விடயங்களை கணக்காய்வுத்துறை அடையாளம் காண்பதுடன், அவற்றின் முறைப்பாடுகள் மற்றும் பிழைகளைச் சரிசெய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவது ஆகியவை முக்கியப் பணிகளாகக் கருதப்பட வேண்டும்.
அத்துடன், கிழக்கு மாகாண திணைக்களங்களில் தேவையற்ற செலவினங்களைக் குறைத்தல், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல், கிழக்கு மாகாண அரச நிதிகளைப் பயன்படுத்துவதில் செயல்திறனை அதிகரித்தல், அரசாங்கக் கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்தல் மற்றும் நிதி மேற்பார்வையை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |