வாழ்வாதாரத்தை இழந்துள்ள கிழக்கு கடற்றொழிலாளர்கள்
சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதுவித வருமானமும் இன்றி தாம் பெரிதும், கஷ்டப்படுவதாகவும் நிவாரணங்களை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் தோணிகள்
இதேவேளை மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் தோணிகள் வள்ளங்களை தற்போது கடல் பேரலையிலிருந்து காப்பாற்றும்முகமாக கட்டி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தொடர்ந்தும் கரையோர பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் அதிக நாட்கள் தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் தங்களுக்கு நிவாரணங்கள் வழங்க உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |